internet

img

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கேம் ஸ்கேனர் நீக்கம்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பாதுகாப்பு குறைபாடு காரணமாக கேம் ஸ்கேனர் செயலி நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேம் ஸ்கேனர் செயலியை, லட்சக்கணக்கான பயனர்கள்  பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்ற முடியும். பெரிய அளவில் பயன்பட்ட இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள்  கூகுளுக்கு தெரிவித்தனர். இதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம், இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களையும்  அறிவுறுத்தியது. இதனை அடுத்து கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும்,  ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம் ஸ்கேனர்  செயலியில் வணிக வருவாய்க்காக  ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறும் என்றும், இதில் உள்ள போலி விளம்பரங்கள் மூலம் மால்வேர் உருவாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது. ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் மூலம் ஸ்மார்ட் போன் வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 

;