india

img

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரத் பவார் வாழ்த்து....

மும்பை 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மதியம் 1:30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 149 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி 84 இடங்களில் முன்னிலையில் உள்ளது

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணி 31 இடங்களில் கூடுதலாக முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.  

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வெற்றி தகுதியானது. உங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து உங்களை தேர்வு செய்துள்ளனர்"  என தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். 

;