india

img

மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை?

பிரதமர் நரேந்திர மோடியின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கேள்வி எழுப்பினார்.

ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணியில், முஸ்லிம்கள் ஊடுரு வல்காரர்கள் என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாட்டின் செல்வம் முஸ்லிம்களுக்கு பங்கிடப்படும் என்றும் மோடி கூறினார். இந்த பச்சையான மதவெறிப் பிரச்சாரத்துக்கு இன்னும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

முதல் கட்ட தேர்தலுக்கு பிறகு ஏமாற்றமடைந்த பிரதமர் நரேந்திர மோடி மத அடிப்படையிலான அணி திரட்டல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், காசர்கோடு பத்திரிகையாளர் மன்றத்தில் பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரகாஷ் காரத் மேலும் கூறியதாவது:

நாட்டில் உள்ள இந்துக்களின் சொத்து, தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என ராஜஸ்தானில் மோடி பேசுகிறார். இது சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவா உணர்வுகளை உருவாக்கி வாக்குகளைப் பெறுவதே மோடியின் நோக்கம்.

முதற்கட்டத் தேர்தலில் கடந்த முறை கிடைத்த சீட் கிடைக்காது என உள வுத்துறை மூலம் தகவல் கிடைத்திருக்க லாம். இதில் பிரதமர் மிகுந்த ஏமாற்றம்  அடைந்துள்ளார்.  இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த காலத்தை விட சிறந்த முன்னேற்றம் அடையும். ராஜஸ்தானில் பிரதமரின் பேச்சுக்கு எதிராக சிபிஎம் புகார் அளித்துள்ளது. 

மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று வெறுப்புப் பேச்சுகளை வெளியிடும்போது தேர்தல் ஆணையம் தூங்குவது போல் நடிக்கிறது. 

அவருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தாதா?. ராமர் கோவில் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நகரவில்லை.

;