india

‘அக்னிபாத்’ திட்டத்தால் சமூகமே ராணுவமயமாகும் ஆபத்து மோடி அரசுக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் எதிர்ப்பு!

புதுதில்லி, ஜூன் 16 - ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு, ராணுவ வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளை ஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலை யில், “ராணுவத்தில் காண்ட்ராக்ட் அடிப்படை யில் வீரர்கள் நியமிக்கும் முடிவு, நாட்டிற்கே ஆபத்து; அது ராணுவக் கட்டமைப்பைக் குலைப்பதுடன், ஒட்டுமொத்த சமூகத்தையும் ராணுவமயமாக்கும் ஆபத்து உள்ளது” என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி டுவிட்டர் பக்கத்தில் தனது எதிர்ப்பை  விரிவாக வெளியிட்டுள்ளார். அதில், “அக்னிவீர் திட்டத்தால் நான் அதிர்ச்சி யடைந்தேன். முதலில் இது சோதனை அடிப்படை யில் மேற்கொள்ளப்படும் திட்டம் என்று நினைத் தேன். ஆனால், இந்திய ஆயுதப் படைகளை சீனர்களைப் போல குறுகிய கால அரை-கட்டாயப் படையாக மாற்றுவதற்கான நிரந்தர ஏற்பாடு என்பது தெரியவருகிறது. கடவுளுக்கு உண்மை யாக, தயவுசெய்து இந்த திட்டத்தை செயல் படுத்திவிட வேண்டாம்; சீனா, பாகிஸ்தான் நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில், பணத்தை சேமிப்பதற் காக தயவு செய்து, நமது ராணுவ கட்டமைப்பு களை (Let’s not destory our instutions) அழித்து விடாதீர்கள்” என்று ஜி.டி. பக்ஷி இறைஞ்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  “அக்னிவீரர்கள் தேர்வில், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தவிர, இராணுவ வீரர்களின் நலன், ஒழுக்கம், நாட்டின் நலன் ஆகியவை கருத்தில் கொள்ளப்படவில்லை. அந்த வகையில்,  அக்னிவீரர்கள் கோட்பாடு சிறந்தது இல்லை. போதுமான முன்னறிவிப்பு ஆலோசனைகள் இன்றியும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சிபெற்ற மற்றும் இளம் இராணுவ மனித சக்தியை நாம் நிரந்தர மாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால்,  அது பயங்கரவாதிகள் அல்லது கிளர்ச்சியாளர் களுக்கு சாதகமாகி விடலாம்” என்றும் ஜி.டி. பக்ஷி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா, “அக்னிவீரர்கள் திட்டம்  ஒரு பின்னோக்கிய நடவடிக்கை; இது ஆயுதப்  படைகளுக்கு நன்மை பயக்காது. தீமையான  விளைவுகளையே எதிர்நோக்க வேண்டியிருக் கும். மேலும், இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பயிற்சியில் கழிந்துவிடும். இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஒருவர் வீரராக  இருப்பார். இது படைப்பிரிவுகளின் நெறி முறை, ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு போதுமா னது அல்ல!” என்று  கூறியுள்ளார்.

 மற்றொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனர லான வினோத் பாட்டியா, இன்னும் ஒருபடி மேலே  சென்று, “அக்னிபாத் திட்டம் ஆயுதப் படைகளு க்கு சாவு மணி” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். “இந்த  திட்டம் ஒட்டுமொத்த சமூகத்தை இராணுவமய மாக்கும் ஆபத்திற்கு வழிவகுக்கும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதே கருத்தையே ஓய்வு பெற்ற லெப்டி னண்ட் ஜெனரல்  பி.ஆர். சங்கரும் தனது வலைப் பதிவில் முன்வைத்துள்ளார். “நாட்டைப் பாது காப்பதற்கான ‘கடமைக்கான பயணம் (Tour Of  Duty)’ நல்ல யோசனையாகத் தெரியவில்லை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘அக்னிபாத்’ திட்டம் தொடர்பாக ஊடகவிய லாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கும், ஒன்றிய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதி யுமான ஜெனரல் வி.கே. சிங்கும் மழுப்பலாகவே பதிலளித்துள்ளார். “இந்தத் திட்டத்தை வகுப் பதில் தனக்கு ஈடுபாடு இல்லை என்றும்,  அதைப் பற்றி தனக்கு அதிகம் தெரியாது  என்றும் இது களத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகே விஷயங்கள் தெளிவாகும்” என்றும் மறை முகமாக தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்கள்
“தொழில்முறையிலான ராணுவத்தை உரு வாக்குவதற்குப் பதில். ஓய்வூதியப் பணத்தை  மிச்சப்படுத்துவதற்காக ‘ஒப்பந்த ராணுவ வீரர் கள்’ திட்டத்தை மோடி அரசு முன்மொழிந்திருக் கிறது. மூன்றரை ஆண்டுகளுக்குப் பணிபுரியும் வீரர்கள், அதன்பிறகு வேறு வாய்ப்புகள் இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு சேவை  செய்வார்களா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். “இந்த தேச விரோத திட்டத்தை உடனடியாக ரத்து  செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். “இந்தியா இரண்டு முனைகளில் அச்சுறுத்த லைச் சந்திக்கும் போது, ​யாரும் கோராத ‘அக்னிபாத்’ திட்டம் மூலம் பாஜக அரசு நமது  ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை குறைக்கிறது.

நமது படைகளின் கண்ணியம், மரபுகள், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை நிறுத்த வேண்டும்” என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள் ளார். “நாட்டில் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மிகப்பெரிய நிறுவனங் களுக்கான இந்திய ரயில்வே மற்றும் ராணுவம், ஒப்பந்தம் மற்றும் சிவில் சேவையில் பக்க வாட்டு நுழைவு என்ற பெயரில் வேலை கொடுக்க ஆரம்பித்தால் இளைஞர்கள் என்ன செய் வார்கள்? எதிர்காலத்தில் பாஜக-வின் முதலாளித் துவ நண்பர்கள் நடத்தும் வணிகத் தளங்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வார்களா?” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார். “ராணுவத்தில் தற்காலிக ஆட்சேர்ப்பானது, ராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் மன உறுதிக்கு கேடு விளைவிக்கும். “இது ஒரு டிப்ளமோ க்ராஷ் கோர்ஸ் போன்றது, இது நான்கு ஆண்டு களுக்குப் பிறகு வெளிவரும் மிக இளம் பணியா ளர்களுக்கு அதிக மதிப்பை அளிக்காது. மேலும்,  நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஆட்சேர்ப்பு க்குத் தேர்வுசெய்யக்கூடிய வேட்பாளர் களைத் தேர்ந்தெடுக்க என்ன அளவுகோல் பயன்படுத்தப்படும் என்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டிருக்கவில்லை. இந்தத் திட்டம், ராணுவத்தில் உள்ள படைப்பிரிவு அமைப்பைக் கலைப்பதற்கான ஒரு பரி சோதனையாகும். மேலும் “நாம், நமக் மற்றும் நிஷான் (கௌரவம், விசுவாசம் மற்றும் அடை யாளம்) என்ற நீண்டகாலக் கொள்கைக்கு எதிரானது!” என்று ராஷ்டிரிய லோக்தளம் தலைவர் சவுத்ரி ஜெயந்த் சிங் கூறியுள்ளார்.

;