india

img

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல்

புதுதில்லி,ஏப்.25- 18-வது நாடாளுமன்ற மக்க ளவைத் தேர்தலுக்கான அறி விப்பை கடந்த மார்ச் 16 அன்று  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளி யிட்டார்.

 அதில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநி லங்களில் ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதி யாக அறிவிக்கப்பட்டு இருந்த கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் புதனன்று பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், அங்கு வெள்ளியன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  

இரண்டாம் கட்ட தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி ஆளும் மாநிலமான கேரளத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ள நிலையில், அங்கு உள்ள 20 தொகுதிகளுக்கும் முழுமையாக தேர்தல் நடைபெறவுள்ளது. மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதி களுக்கும், முதல்கட்ட வாக்குப்பதிவை சந்தித்த ராஜஸ்தான், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவோடு மக்களவைத் தேர்தல் நிறைவு பெறுகிறது.  

அசாம் (4), கர்நாடகா (14), மகாராஷ்டிரா (35), பீகார் (31), உத்தரப்பிரதேசம் (64), சத்தீஸ்கர் (7), மத்தியப்பிரதேசம் (17), மேற்கு வங்கம் (36), ஜம்மு&காஷ்மீர் (3) உள்ளிட்ட மாநிலங்களில் மீதமுள்ள தொகுதிகளுக்கு அடுத்தகட்ட தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்
          மொத்த தொகுதிகள்        2ஆம் கட்டம்    
1. கேரளா           20    20
2. அசாம்    14    5 
3. பீகார்    40    5
4. சத்தீஸ்கர்    11    3
5. கர்நாடகா    28    14
6. மத்தியப்பிரதேசம்    29    6
7. மேற்கு வங்கம்    42    3
8. மகாராஷ்டிரா    48    8
9. மணிப்பூர்    2    2
10. ராஜஸ்தான்    25    13
11. திரிபுரா    2    1
12. உத்தரப்பிரதேசம்    80    8
13. ஜம்மு&காஷ்மீர்    5    1

;