india

img

தில்லியில் வார இறுதியில் முழு முடக்கம்....

 புதுதில்லி:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாள்களில் முழு முடக்கம் அமல்படுத்தப் படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 இதன்படி வாரத்தின் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பெரிய அரங்குகள், வணிக வளாகங்கள்,உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை இயங்காது. திரையரங்குகள் 30 விழுக்காடு பார்வையாளர்களுடன் செயல்படலாம்.உணவகங் களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல்களுக்கும், வீடுகளுக்கு உணவுகளை விநியோகிக்கவும் மட்டுமே அனுமதி. வார இறுதி நாள்களில் செயல்படும் சந்தைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டும்.”கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமமாகவே இருக்கும். எனினும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு இவை தேவைப்படுகின்றன” என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் .

 முழுமுடக்க அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னதாக துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் சந்தித்துப்பேசினார்.தில்லியில்புதன்கிழமை மட்டும் 17,282 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நூற்றுக்கும் அதிக
மானோர் உயிரிழந்தனர். பாதிப்பு விகிதம் 16 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. மொத்தம் 5,736 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை கெஜ்ரிவால் மறுத்தார்.
 சமீபத்திய விவரங்களின்படி சுமார் 5 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமுடக்கம் சரியான வழிஇல்லை, மருத்துவக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தால் மட்டுமே அது தேவைப்படும் என முன்பொருமுறை கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

;