india

img

காவி நிறத்திற்கு மாற்றப்பட்ட தூர்தர்ஷன் இலச்சினை!

தூர்தர்ஷன் செய்தி நிறுவனத்தின் இலச்சினை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசு நடத்தும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சியின் (டிடி நியூஸ்) இலச்சினையை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக அரசு தனது கட்சி நிறமான காவி நிறத்தை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் புகுத்தி வருகிறது.  இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரசார் பாரதி முன்னாள் தலைவர், எம்.பியுமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க இலச்சினையைக் காவி நிறத்தில் மாற்றியுள்ளது. அதன் முன்னாள் சிஇஒ என்ற முறையில், அதன் காவிமயக்கத்தை எச்சரிக்கையுடன் கவனித்தும், உணர்ந்தும் வருகிறேன். இனி இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சாரம் (பாஜக-வுக்கு) செய்யும் பாரதி” எவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

;