india

img

அமெரிக்கன் படைப் புழுவால் சோளப்பயிர் சேதம்

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு பகுதியில் சோளப்பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர்.தஞ்சாவூர் அருகே நாஞ்சிக் கோட்டை பிர்காவுக்கு உட்பட்ட வேங்கராயன்குடிக்காடு, அதி னாம்பட்டு, வல்லுண்டாம்பட்டு, வடக்குப்பட்டு ஆகிய கிராமங்களில் மார்கழி பட்டமாக கடந்த மாதம் சோளம் விதை விதைக்கப்பட்டது.

தற்போது சோளப்பயிர்கள் ஒரு அடியிலிருந்து இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து வந்த நிலையில், பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்கி, பயிர்களின் சத்தை உறிஞ்சி, சருகு போல் காய்ந்து வருகிறது. இதனால் பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இந்த பகுதியில் மட்டும் 100 ஏக்கரில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 50 ஏக்கரில் அமெரிக்கன் படைப்புழுதாக்குதல் தென்படுகிறது. இவைதொடர்ந்து அடுத்தடுத்த விவ சாயிகளின் சோளப்பயிர்களுக்கும் பரவி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் பயிர்களை அழித்துவிட்டு மீண்டும் அந்த இடத்தினை உழுது, எள் சாகு படியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து வேங்கராயன் குடிக்காடு விவசாயி சி.வில்லப்பன் கூறுகையில், ‘நான் மூன்றரை ஏக்கரில் மார்கழி பட்டமாக கடந்த டிசம்பர் மாதம் கிலோ ரூ.340 என 10 கிலோ விதையை தனியார் விதைவிற்பனையகத்தில் வாங்கி விதைத்தேன். பயிர்கள் ஒரு அடி உயரத்துக்கு வந்ததும், இந்த புழுதாக்குதல் தென்பட்டது. உடனடி யாக விதை விற்பனையகத்தில் சென்று கூறினேன். அவர்கள் தண்ணி மருந்து தெளிக்க வேண்டும் என கூறி ரூ.500க்கு பூச்சிக்கொல்லியை கொடுத்தனர். ஆனாலும் புழு கட்டுப்பட வில்லை. ஏக்கருக்கு உழவு, விதை,விதை நடவு, பூச்சிக்கொல்லி எனரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும்பயிரை காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இதே போல் எங்கள் பகுதியில் மார்கழி பட்டத்தில் சோளம் விதைத்த அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மைத்துறையினர் இந்தபுழுவை முழுமையாக கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்குவதோடு, பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்.தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் கூறுகையில், “சோளத்தில் அமெரிக்கன் படைப் புழு தாக்குதல் தென்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு உடனடியாக வேளாண் அலு வலர்கள் கள ஆய்வு செய்து மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

;