india

img

2023 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் அறிவிப்பு - ஐசிசி

2023 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளை விளையாடும் தகுதிபெற்ற நாடுகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதில், நியூசிலாந்து வென்று சாம்பியனானது. இதனையடுத்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தகுதி பெற 9 நாடுகளுக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் மோதுகிறது. மேலும் வெளிநாட்டில் வங்கசேதம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் மோதுகிறது. இதுபோல மற்ற நாடுகளுக்கும் போட்டி அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. 

இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 2023 இல் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும்.

மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளி கணக்கீடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வெற்றிக்கும் 12 புள்ளிகளும், டிரா செய்தால் 4 புள்ளிகளும், ஆட்டம் டை ஆனால் 6 புள்ளிகளும் வழங்கப்படும் என திருத்தப்பட்ட புள்ளி கணக்கீட்டு முறையை ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த முறை ஒவ்வொரு தொடருக்கும் ஒரே மாதிரியான புள்ளிகள் வழங்கப்பட்டது. அதாவது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராயினும், 5 போட்டிகள் கொண்ட தொடராயினும், ஒரே முறையே பின்பற்றப்பட்டது. இந்த சிஸ்டம் விமர்சினத்திற்குள்ளான நிலையில், புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

 

;