india

img

கொரோனா தடுப்பு ஆய்வுக் குழுவின் தலைவர் ஷாகித் ஜமீல் பதவி விலகல்....

புதுதில்லி:
மத்தியஅரசின் கொரோனா தடுப்பு ஆய்வுக் குழு மற்றும் ஆலோசனைக் குழுத்தலைவர் பொறுப்பிலிருந்து மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் திடீரென பதவி விலகியுள்ளார். விலகல் குறித்து எந்தவிதமான காரணத்தையும் அவர் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.சார்ஸ் கொரோனா வைரஸின் மரபணுகூட்டமைப்பின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்உருவாக்கப்பட்டது. நாட்டில் உள்ள 10 முக்கியமான அரசின் ஆய்வகங்களை ஒன்றிணைத்து இந்த ஆய்வகங்கள் உருவாக் கப்பட்டன. இந்த ஆய்வுக்குழுவுக்கும், ஆலோசனைக் குழுவுக்கும் தலைவராக மூத்தவைராலஜிஸ்ட் ஷாகீத் ஜமீல் நியமிக்கப் பட்டார். அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர்அறிவியல் துறையின் தலைவராகவும் ஷாகித் ஜமீல் இருந்து வருகிறார்.

இந்தியாவில் தற்போது 3 உருமாறிய கொரோனா வைரஸ்கள் குறித்தும், இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் குறித்தும் ஷாகித் ஜமீல் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வந்தனர்.இந்நிலையில், எந்தவிதமான காரணமும் வெளியிடாமல் ஷாகித் ஜமீல் விலகியுள்ளார்ஆனால் ஆங்கில செய்தி சேனல்கள் வெளியிட்ட செய்தியில், சமீபத்தில், ஷாகித் ஜமீல் அமெரி்க்காவில் வெளிவரும் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் மத்திய அரசைப் பற்றி எழுதியுள்ளார்.அதில், இந்தியாவில் மெதுவாக நடந்துவரும் தடுப்பூசி, கொரோனா பரிசோதனையை வேகப்படுத்தாதது, தடுப்பூசிப் பற்றாக் குறை ஆகியவை பற்றி மத்திய அரசைவிமர்சி்த்திருந்தார். மேலும், மத்திய அரசு கொரோனா குறித்து ஆய்வுகளை நடத்த போதுமான ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் மத்திய அரசை எதிர்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

;