india

img

நாங்கள் நடத்துவதும் வாழ்வா, சாவா? போராட்டம்தான்... கொரோனாவுக்கு பயந்து தில்லி எல்லைகளை காலிசெய்யும் பேச்சிற்கே இடமில்லை... பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேட்டி....

புதுதில்லி:
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக, மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக, தில்லியின் திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூர் ஆகிய3 எல்லைகளையும் முற்றுகையிட்டு, விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மழை, குளிர், வெயில் என அனைத்து கால நிலைகளையும் தாங்கி விவசாயிகள் நடத்தும் போராட்டம் 170 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் உயிரைவிட்டுள்ளனர்.எனினும் வேளாண் சட்டங்களைஒழித்துக் கட்டாமல் சொந்த ஊருக் குத் திரும்ப மாட்டோம் என்று லட்சக்கணக்கான விவசாயிகள் உறுதியுடன் தங்களின் போராட்டத் தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா தொற்றின் 2-ஆவது அலையைக் காரணம் காட்டி, விவசாயிகளின் இந்தப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது. விவசாயிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் தங்கள் வீடுகளுக்கும், போராட்டக் களத்துக் கும் சர்வ சாதாரணமாக பயணிக் கின்றனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. போராட்டக்களத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என விவசாயிகள் கூறினாலும், திக்ரி போராட்டக் களத்தில்கடந்த ஏப்ரல் 30 அன்று கூட, 26வயது பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கிசான்சமூக ராணுவத்திற்கும் தொற்று பரவியுள்ளது. தடுப்பூசி முகாம்களையும் விவசாயிகள் ஏற்க மறுக்கிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் மூலம் நெருக் கடியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் 2-ஆவது அலைக்கு இடையே விவசாயிகளின் போராட்டநிலைபாடு குறித்து, பாரதிய கிசான்யூனியனின் (ராஜேவால்) தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேட்டி ஒன்றைஅளித்துள்ளார். அதில், என்ன நடந்தாலும், விவசாயிகள் தில்லி போராட்டக் களத்தைவிட்டு ஊர்களுக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:‘நாங்கள் இப்போது திரும்பிச் சென்றால், அதன்பின்னர் யாரும்எங்களைக் கவனிக்கப் போவதுஇல்லை. அரசாங்கம் எதிர்ப்புகளின்றி சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை நிரந்தரமாக்கி விடும். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்துவிட்டால், அத்துடன் எங்கள் எதிர் காலம் முடிந்துபோகும். எனவே, இதுதான் எங்களின் வாழ்வா, சாவா போராட்டம்.போராட்ட சூழ்நிலையில் மட்டுமல்ல, நாங்கள் கொரோனா காரணமாகவோ அல்லது பசியின் காரணமாகவோ இறந்தால் கூட எங்களைப் பற்றி அரசு கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால், உண்மையிலேயே விவசாயிகள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. இருந்திருந்தால், எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

போராட்டக்களத்தில் கொரோனா காரணமாக விவசாயிகள் இறந்தால் அதற்குப் பொறுப்பு விவசாயிகள் சங்கங்கள் அல்ல. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாஆகியோர்தான். அவர்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள்தான். இங்கே போராடுபவர்கள் யாரும்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிஅல்ல. நாங்கள் எங்கள் உரிமைகளைக் கேட்கும் விவசாயிகள் மட்டுமே. எனினும், விவசாயிகள் மீது அக்கறை கொண்டிருப்பதாக சொல்லும் இந்த அரசாங்கம் ஏன்எங்களுக்கு தடுப்பூசி போடவில்லை? கொரோனாவுக்காக, சட்டங் களை எதிர்ப்பதற்கான எங்களின் அரசியலமைப்பு உரிமையை நாங்கள்விட்டுவிடுவோம் என்று எதிர்பார்த் தால் அது நடக்காது. கொரோனா முன்னெச்சரிக்கையாக சிங்கு எல்லையில் குளிர்பானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சூடான உணவு மற்றும் பானங் கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. வயதானவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வைட்டமின் ‘சி’ மற்றும் வைட்டமின் ‘டி’ மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘கதா’ என்ற மூலிகை தேநீர்வழங்கப்படுகிறது. 40 மருத்துவர் கள் அடங்கிய குழு எங்களை பாதுகாத்து வருகின்றனர். எங்களிடம் 10 ஆக்சிஜன் சிலிண்டர்களும் 10 படுக்கைகளும் உள்ளன. யாருக்காவது காய்ச்சல் வந்தால், அதைக்குறைக்க உடனடியாக அவர்களுக்குமருந்துகளை வழங்குகிறோம். தேவையான முன்னெச்சரிகைகளை எடுத்து வருகிறோம். 

எனவே, ஒருபோதும் போராட்டக்களத்தை விட்டுச் செல்ல மாட்டோம். நாங்கள் ஏற்கெனவே கூறியது போல, தேவைப்பட்டால் நாங்கள் இன்னும் 6 மாதம் அல்லதுஓராண்டு உட்கார்ந்திருப்போம். அரசாங்கம் என்று பேச்சுவார்த் தைக்கு வருகிறதோ, அன்று மீண்டும்பேசுவோம்’.இவ்வாறு பல்பீர் சிங் ராஜே வால் கூறியுள்ளார்.

;