india

img

சாலை விபத்து உயிர்ப்பலிகளில் இந்தியா முதலிடம்.... மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்.....  

புதுதில்லி;
ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர். இதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் சாலை பாதுகாப்பு சவால்கள்- செயல்திட்டத்தை வகுத்தல்” என்றதலைப்பில் சர்வதேச சாலை கூட்டமைப்பின் இந்திய கிளை சார்பில் நடைபெற்ற  இணைய கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசிய தாவது: இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர். 4.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காயம்ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 415 பேர் சாலை விபத்து களால் இறக்கின்றனர். நிலைமை மிகவும் கவலைஅளிப்பதாக உள்ளது. விபத்துகளில் உலகத்திலேயே முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. சாலை விபத்துகளில் அமெரிக்கா மற்றும் சீனாவையே நமது நாடு மிஞ்சிவிட்டது.2025-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் வரை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். 

விபத்துகளால் ஏற்படும் சமூக-பொருளாதார இழப்புகள் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 3.14சதவீதம் நஷ்டம் ஏற்படுகிறது. உயிரிழப்போரில் 70 சதவீதம்பேர் 18 முதல் 45 வயது பிரிவைசேர்ந்தவர்கள் ஆவர்.  விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருவதாக்வும், 5 ஆயிரம் ஆபத்து மிக்க பகுதிகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

;