india

img

உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டார்..? பதிவாளர் ஜெனரல், வழக்கறிஞர்களும் தப்பவில்லை...

புதுதில்லி:
இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ மென்பொருள் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என சுமார் 300 பிரபலங்கள் இந்தியாவில் வேவுபார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக தேர்தல் வியூகங்களை வகுத்தளித்த பிரசாந்த் கிஷோர், 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தேர்தல் விதிமீறல்களைப் பகிரங்கமாக கண்டித்த முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் அளித்த உச்ச நீதிமன்ற பெண் ஊழியர், அவரின் உறவினர்கள், மருத்துவவல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன் மற்றும் ‘தி வயர்’ இணையதள பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் உள் ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

பாஜகவுக்கு எதிரானவர்கள் மட்டுமன்றி, பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள் மற்றும், பாஜகவுக்கு நெருக்கமான பிரபலங்களும் பெகாசஸ் மென் பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டனர் என்பதுதான் இதிலுள்ள விஷேசம்.இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கமானவரும், பிரதமர் நரேந்திர மோடியைத் துதிபாடி, பணி ஓய்வுக்குப்பின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஆனவருமான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ராவும் வேவுபார்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
“2019-ஆம் ஆண்டு பெகாசஸ் தரவுத் தளத்தில் சேர்க்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண் ஓய்வுபெற்ற நீதிபதிஅருண் மிஸ்ரா உடையது என்பதை, அருண் மிஸ்ராவிடமே பேசி ‘தி வயர்’ செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிஎஸ்என்எல் ஆவணங்கள் அடிப்படையில், பெகாசஸ் ஒட்டுக் கேட்பில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், 2010 செப் டம்பர் 18 முதல் 2018 செப்டம்பர் 19 வரைநீதிபதி மிஸ்ராவின் பெயரில் இருந் துள்ளது உறுதியாகியுள்ளது. “இந்த குறிப்பிட்ட எண்ணை, நான் 2014, ஏப்ரல் 21 அன்றே ஒப்படைத்து விட் டேன். இருப்பினும் 2019-ஆம் ஆண்டில் எதற்காக எனது தொலைபேசி எண் பெகாசஸ் தரவில் சேர்க்கப்பட்டது? என தெளிவாகத் தெரியவில்லை” என்று அருண் மிஸ்ரா கூறியுள்ளார்.

“உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ‘பிரதமர் மோடி ஒரு தீர்க்கதரிசி’ என்று வெளிப்படையாகப் புகழ்ந்து சர்ச்சைக்கு உள்ளானவர்தான் அருண் மிஸ்ரா. உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவி அவருக்குவழங்கப்பட்டது.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவரையே நியமிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், அருண் மிஸ்ராவுக்காகவே, அந்த சட்டத்தை, 2019ஆம் ஆண்டுஜூலையில் ‘ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றநீதிபதியை நியமிக்கலாம்’ என்று மோடி அரசு திருத்தம் செய்தது. மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 5 பேர் இப்பதவிக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் தலைமை நீதிபதி அல்லாத அருண் மிஸ்ராவுக்கு அப்பதவியை வழங்கியது. இதனிடையே ஏனோ அவரும் வேவு பார்க்கப்பட்டுள்ளார்.உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா மட்டுமல்ல, இந்தியஉச்ச நீதிமன்றப் பதிவாளர், நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களின் தொலைபேசி எண்களும் பெகாசஸ் மென்பொருள்மூலம் வேவு பார்க்கப்பட்டு இருக்கலாம் என்று ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

;