india

img

உ.பி. சட்டமன்ற தேர்தல்: இப்போதே விழிபிதுங்கும் பாஜக.... 200 தொகுதிகளைக் கேட்டு கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி....

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு, அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணிக்குள் இப்போதே குத்து-வெட்டு ஆரம்பித்து விட்டது.முதல்வர் பதவி யாருக்கு? என்பதில் பாஜக-வுக்கு உள்ளேயே மோதல்நடந்து வருகிறது. தற்போதைய முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பிரதமர் மோடியின் ஆதரவாளரான அரவிந்த்குமார் சிங் ஆகியோருக்கு இடையே தீவிரப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில்தான், கூட்டணிக் கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் மற் றும் முதல்வர் பதவியைக் கேட்டு கொடிபிடிக்கத் துவங்கியுள்ளன.உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 160 தொகுதிகளுடன் துணைமுதல்வர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றுகூட்டணியிலுள்ள நிஷாத் கட்சி பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. தங்களை ஏமாற்ற முயன்றால், பாஜக-வை நிம்மதியாக இருக்கவிட மாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் பகிரங்கமாகவே மிரட்டியுள்ளார்.பீகாரில் பாஜக கூட்டணியில் இருக்கும் விகாஸீல் இன்சான் கட்சி, உ.பி.யிலும் பாஜக கூட்டணியில் இணைந்துபோட்டியிட முயன்று வருகிறது. எனினும், தொகுதி எண்ணிக்கையைப் பொறுத்தே கூட்டணியை முடிவு செய்வோம் என்று அந்த கட்சி ‘செக்’வைத்துள்ளது.

அப்னாதள் கட்சியும் கூட்டணி தொடர்பாக கடந்த மாதம் நேரடியாகவே அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.  அப்போது அதிக தொகு திகள் வேண்டும் என்று அந்த கட்சியின் தலைவர் அனுபிரியா சிங் படேல்கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில், பாஜகவுக்கு மிகவும் விசுவாசமாக இருந்துவரும் இந் திய குடியரசுக் கட்சி (அத்வாலே பிரிவு) தலைவர் ராம்தாஸ் அத்வாலேவும் திடீரென கூடுதல் தொகுதிகளை கேட்டு சைலண்டாக பிரச்சனையை ஆரம்பித்துள்ளார். “உ.பி. தேர்தலில் தங்களது கட்சியும் போட்டியிட உள்ளது; தங்களுக்கு 8 முதல் 10 சீட்டுகள் வரை தர வேண்டும்; இது குறைவான எண்ணிக்கைதான். இதை நிச்சயம் பாஜக தரும்” என்று கூறியுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் இந்தபோக்கு பாஜகவுக்கு புதிய நெருக்கடியாக மாறியுள்ளது.

;