india

img

பீகாரைப் போல உ.பி.யிலும் ஓவைசி எங்களுக்கு உதவுவார்.... பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் சொல்கிறார் ..

 லக்னோ:
மஜ்லிஸ் கட்சியின் தலைவர்அசாதுதீன் ஓவைசி, பாஜக-வின் ‘பி’ டீமாக செயல்படுகிறார்; மதச்சார்பற்ற கட்சிகளுக்கு செல்ல வேண்டிய சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம், மறைமுகமாக பாஜக-வுக்கு உதவுகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உள்ளது.

மகாராஷ்டிரா, பீகார் தேர்தல்களங்கள் அதனை உறுதிப் படுத்தியும் இருக்கின்றன. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - என்சிபிகட்சிகளுக்கு செல்ல வேண்டியவாக்குகளையும், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளத்திற்கு செல்ல வேண்டியவாக்கு களையும் ஓவைசி பிரித்ததால், இந்த 2 மாநிலங்களிலுமே பாஜகவென்றது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றியைத் தவறவிட்டன.தற்போது ஓவைசி மேற்குவங்கம், உ.பி. தேர்தல்களிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். உ.பி. மாநிலத்தில், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, பீம் ஆர்மி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக உ.பி.க்கு நேரில் சென்று ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் உ.பி. மாநிலம்உன்னோவ் தொகுதி பாஜக எம்பிசாக்‌ஷி மகராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், “உ.பி.யில் ஓவைசிகட்சி போட்டியிடுவது இறை வனின் செயல். இறைவன் அவருக்கு மேலும், பலமளிக்க வேண்டுமென விரும்புகிறேன். பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறுவதற்கு ஓவைசிபெரிதும் உதவி செய்தார். அதுபோல் மேற்குவங்கம் மற்றும் உத்தர ப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றிபெற ஓவைசி துணையாக இருப்பார்” என்று ‘நம்பிக்கை’ தெரிவித்துள்ளார்.
 

;