india

img

2 கோடி ரூபாய் நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி ஊழல்... ராமர் கோயில் அறக்கட்டளையினர் பதிலளிக்க ஆதித்யநாத் உத்தரவு...

லக்னோ:
ரூ. 2 கோடி மதிப்பிலான நிலத்தைரூ. 18 கோடியே 50 லட்சத்திற்கு வாங்கி, பக்தர்களின் நன்கொடையை ‘அபகரித்த’ விவகாரத்தில், உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயிலை ஒட்டிய பிஜேஷ்வர் தோப்பில், குசும் பதக் என்பவரிடமிருந்து, சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி ஆகியோர் ரூ. 2 கோடிக்கு வாங்கிய நிலத்தை, அடுத்த ஐந்தே நிமிடத்தில்ரூ.18 கோடியே 50 லட்சம் கொடுத்துராமர் கோயில் அறக்கட்டளை வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினரான டாக்டர் அனில்மிஸ்ரா மற்றும் அயோத்தியின் மேயர் ரிஷிகேஷ் உபாத்யா ஆகியோர், ரியல் எஸ்டேட் புரோக்கர் களான அன்சாரி, ரவிமோகன் திவாரியுடன் கூட்டுச் சேர்ந்து இந்த ஊழல்முறைகேட்டை அரங்கேற்றியிருப் பது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகிஇருப்பதுடன், ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலருக்கும்இந்த ஊழலில் தொடர்பிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தையும் ராம பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், ராமர் கோயில்நில முறைகேடு தொடர்பான புகாரில் விளக்க அறிக்கை அளிக்குமாறு, ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு உத்தரப்பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள் ளார்.
 

;