headlines

img

அவகாசம் போதாது

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.  இந்த வரைவு தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இணையங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த வரைவு அறிக் கையை மத்திய அரசு சார்பில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அதன்மீது கருத்து தெரிவிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்பது பர வலாக எழுந்துள்ள கோரிக்கையாகும்.

இந்த வரைவு அறிக்கையில் இந்தியாவின் கல்வித் துறையை மதவெறிமயமாக்கவும், வணிக மயமாக்கவும், கல்வித்துறையை முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வ தற்குமான பல்வேறு ஆபத்தான பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. மாநில அரசுகளிடம் கூட இதுகுறித்து விரிவான முறையில் ஆலோசனை நடத்தப்படவில்லை. அண்மையில் மாநில அளவிலான கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன என்பது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.  மும்மொழி கொள்கை என்ற பெயரில் தாய்மொழி வழிக் கல்வியை முற்றாக புறக்க ணித்து கூடுதல் சுமையாக இந்தி பேசாத மாநிலங்க ளில் இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதற் கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தி அல்லது ஏதாவது ஒரு மொழியை படிக்க லாம் என்று திருத்தம் செய்யப்பட்டாலும் மூன்று மொழிகளை படித்தாக வேண்டும் என்ற பரிந்துரை நீக்கப்படவில்லை.  அந்நிய பல்கலைக்கழகங்களை வகை தொகையின்றி அனுமதிப்பது,  தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பதற்கேற்ப கட்ட ணத்தை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்கு வது, தொழில் கல்வி என்ற பெயரில் மீண்டும் குலக்கல்வி போன்ற முறையை புகுத்துவது, மாநில அரசுக்கு கல்வித்துறையில் எந்த பங்கும் இல்லா மல் செய்து கல்வித்துறையை முழுமையாக மத்திய அரசு பட்டியலுக்கு மாற்றுவது, நிபுணர் கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் காரர்களை கல்வி நிலையங்களுக்குள் புகுத்துவது, தரம், திறன் என்கிற பெயரில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, ஏழை, எளிய மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து விரட்டுவது, அடுத்தடுத்து தேர்வு, நுழைவுத் தேர்வு என்று மாணவர்களையும், ஆசிரியர்களையும் உளவியல் ரீதியாக சித்ர வதை செய்வது என்று பல ஆபத்தான ஆலோச னைகளின் தொகுப்புதான்  இந்த வரை வறிக்கை. ஆசிரியர், மாணவர், அறிவியல் மற்றும் பண் பாட்டு அமைப்புகள் இதுகுறித்து மக்களிடம் விரி வாக எடுத்துரைத்து, எதிர்ப்பை அதிகப்படுத்த வேண்டும். இப்போது சற்று கவனக்குறைவாக இருந்தாலும் பல தலைமுறை பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கை உணர்வோடு களம் இறங்க வேண்டிய காலம் இது.

;