headlines

img

பூமிக்கும் கேடு..!

பாஜகவின் நாசகரக் கொள்கைகள்  வீட்டிற் கும் நாட்டிற்கும் மட்டுமல்ல, இந்த பூமிக்கே பெரிய கேடாக அமையும் என்று சுற்றுச்சூழல் பாது காப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. காரணம் காடுகளை அழிப்பதில் உலக அளவில் ஒன்றிய மோடி அரசு இரண்டாமிடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் 2015 முதல் 2020 வரை  6 லட்சத்து 68 ஆயிரத்து 400 ஹெக்டேர் காடுகள்  அழிக்கப்பட்டிருக்கின்றன.  காடுகளின் அழிவு காட்டோடு நிற்காது, அதன் தாக்கம் நாடுகளை யும் அழிக்கும். அதன் காரணமாகவே ஐ.நா  சபை 2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தது. இதில் 141 நாடுகள் கையெழுத்திட்டி ருக்கின்றன. ஆனால் ஒன்றிய மோடி அரசு கையெழுத்திடவில்லை.

நாடே அழிந்தாலும் பரவாயில்லை. தனது  காவி கார்ப்பரேட் கூட்டாளிகள்தான் முக்கியம்  என கையெழுத்திடாமல் முரண்டு பிடித்து வரு கிறது. 2014 முதல் 2019 ஆம்  ஆண்டு வரை  காட்டுயிரைக் காவு கொடுக்கும் வகையில்  அனுமதி கோரப்பட்ட 328 திட்டங்களில் 260 திட்டங்களுக்கு உடனடி அனுமதியளித்திருக் கிறது மோடி அரசு.

2011 முதல் 2020 வரை இந்தியாவின் சுற்றுச் சுழல் பாதுகாப்புச் சட்டங்கள் சுமார் 300 முறை  திருத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்த திருத்தங் கள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்ப தற்காக அல்ல. விதிகளை மீறி இயற்கையை அழிப்பதற்கான விதிகளை உருவாக்கத் திருத்தப்பட்டவையாகும்.

இந்தியாவில் மாசற்ற காற்றுத்திட்டம் 131 நகரங்களில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. இருந்த போதி லும் காற்று மாசுபாட்டில் உலகில் மூன்றாமிடத் தில் இந்தியா மூச்சுத்திணறி வருகிறது.  இந்நிலை யில் இந்தியாவில் இருக்கும் காடுகளையும் அழித் தால் என்ன நடக்கும்?  மக்கள் மட்டுமல்ல, உயிரி னங்களின் பாதுகாப்பிற்கும் கேரண்டி இருக்காது காவி கார்ப்பரேட்களின் லாபத்திற்கு மட்டுமே தற்காலிக கேரண்டி கிடைக்கும்.

காரணம் இப்போதே இந்தியாவில்  காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடல்நலக்கோளாறால் ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். உலகளவில் காற்று மிகமோசமாக மாசடைந்த 50 நகரங்களில் இந்திய நகரங்கள் 42 உள்ளன. இதன் மூலம் மக்கள் உயிரைப் பறிப்பதிலும்  இந்தியாவிற்கு உலகளவில் பிரதமர் மோடி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களைக் கொன்று குவிப்பதிலும் இந்தியாவிற்கு  4 ஆம்   இடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.  ஒட்டு மொத்தத்தில் சுற்றுச்சுழல் பாதுகாப்பில்  இந்தியா வை 180 ஆவது இடத்திற்குத் தள்ளியிருப்பவர் தான்  பிரதமர் மோடி. எனவே இந்த தேர்தலில்  பாஜக அரசை  ஆட்சியிலிருந்து  தூக்கி எறி வதே வீட்டிற்கும் நாட்டிற்குமட்டுமல்ல, இந்த பூ உலகிற்கும் பாதுகாப்பு. 

 

;