games

img

தென்னாப்பிரிக்க ஆடுகளத்தை ஒருவரால் சாதகமாகப் பயன்படுத்த முடியும் என்றால் அது  பும்ராவாகத் தான் இருக்க முடியும் -டீன் எல்கர்

தென்னாப்பிரிக்க ஆடுகளத்தை இந்திய பவுலர் ஒருவரால் சாதகமாகப் பயன்படுத்த முடியும் என்றால் அது ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்கும் என டீன் எல்கர் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிறது 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், இந்திய அணி திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆடுகளம் மற்றும் சீதோஷ்ண நிலையை இந்திய பவுலர் ஒருவரால் நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றால் அது நிச்சயம் ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

 

;