games

img

டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக டுவைன் பிராவோ அறிவிப்பு  

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்களிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல மேற்கிந்திய தீவுகள் வீரர் டுவைன் பிராவோ அறிவித்திருக்கிறார்.  

டி20 உலகக்கோப்பை நடந்து வரும் நிலையில் டுவைன் பிராவோ கூறியதாவது, நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். நிறைய ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்தாலும் எனது விளையாட்டு வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் அணியிலிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.  மேலும் டுவைன் பிராவோ இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் 164 ஒருநாள் போட்டிகள், 90 டி20 போட்களில் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆடிவரும் அவர் அபுதாபியில் நாளை நடக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் டுவைன் பிராவோ விளையாடி ரன் குவிப்பில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

;