games

img

2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கும் - ஐசிசி 

2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில், 2024 பெண்கள் T20 உலகக் கோப்பை மற்றும் 2025 மகளிர் ஒருநாள் போட்டி, ஆண்களுக்கான உலகக் கோப்பை ஆகியவற்றிற்கான தகுதிச் செயல்முறையை ஐசிசி இறுதி செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் முதன்முறையாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும்  இப்போட்டிக்கு 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் 8 அணிகள் அடுத்த உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும். போட்டியை நடத்தும் நாடுகளான அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் நேரடித் தகுதியை அடைந்துள்ளன. மீதமுள்ள இரு அணிகள், தரவரிசையின் அடிப்படையில் தேர்வாகும். 

ஒருவேளை மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் 8 இடங்களில் இடம் பெற்றுவிட்டால், தரவரிசையின் அடிப்படையில் மூன்று அணிகள் தேர்வு செய்யப்படும். இதர 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகும் என ஐசிசி தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்கவிருப்பது இதுவே முதல்முறை.

2024 ஆம் ஆண்டு பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கு இதேபோன்ற தகுதிச் செயல்முறை பின்பற்றப்பட உள்ளது. இதில் பத்து அணிகள் விளையாட உள்ளன, எட்டு அணிகள் தானாக தகுதி பெரும்.  தென்னாப்பிரிக்காவில் திட்டமிடப்பட்ட 2023 பதிப்பில் இரண்டு குழுக்களிலிருந்து முதல் மூன்று அணிகள், போட்டி நடத்துபவர் மற்றும் ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணிகள் இடம்பெறும். முதல் ஆறு அணிகளில் ஹோஸ்ட்கள் இருந்தால், அட்டவணையில் அதிக தரவரிசையில் உள்ள அணிகள் தானாகவே தகுதி பெறும். மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றிலிருந்து வெளிவரும். 

இதற்கிடையில், முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பை 2023 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் இந்த போட்டிகள் பிப்ரவரி 9 முதல் 26 வரை நடைபெற உள்ளது என ஐசிசி தெரிவித்துள்ளது. 

 

 

 

;