facebook-round

img

சூறைக் காற்று போல் மக்களைச் சுழற்றி அடிக்கும் பொருளாதார மந்தம்

Vijayasankar Ramachandran

பொருளாதார மந்தம் கார், ஸ்கூட்டர், டிராக்டர் உற்பத்தியை மட்டும் தாக்கவில்லை. பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக் (லாரி) உற்பத்தியாளர்கள் இனி புதிதாக டிரக் வாங்குவதில்லை என முடிவு செய்திருக்கின்றனர். 28 % ஜிஎஸ்டியும் அதிகரிக்கப்பட்ட இன்ஷுரன்ஸ் தொகையும் இதற்கு முக்கிய காரணங்கள். இது மட்டுமல்ல ஏற்கெனவே ஓடிக் கொண்டிருக்கும் 1 கோடி டிரக்குகளில்
60 லட்சம் டிரக்குகள் (லாரிகள்) முடங்கிக் கிடப்பதாக பிசினஸ்லைன் செய்தி. டிரக்குகளை இயக்கும் தனி நபர்களும் நிறுவனங்களும் வங்கிக் கடனுக்கான ஈ எம் ஐ கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.
மக்களின் பொருள் நுகர்வு குறைந்து விட்டதால் இந்த நிலை. வாங்கும் சக்தி குறைந்ததால் பொருள் நுகர்வு குறைந்து விட்டது. இதனால் உற்பத்தி குறைந்து அதனால் மேலும் வேலை இழப்பு.
சூறைக் காற்று போல் மக்களைச் சுழற்றி அடிக்கிறது பொருளாதார மந்தம்.

;