facebook-round

img

இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியத்தை குறைத்த மோடி!

இஸ்ரோ... உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?

உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில்,ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும்,பிறகு அந்தப் பொய் உண்மையென்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெள்ளத்தெளிவாக உணர்ந்து சொல்லியிருக்கிறார். இதை எப்போது இந்த நாடு உணர்ந்துகொள்ளும் என்பதுதான் தெரியவில்லை.

இஸ்ரோ விஞ்ஞானிகளோடு மானசீகமாக கை கோர்த்து இன்று எல்லோரும் நிற்கிறார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டபோது அவர்களோடு யாரும் இருக்கவில்லை. யாரும் அவர்களுக்காக பேசவில்லை

மோதி அரசு சந்த்ரயான் - 2 ஏவுவதற்கு கொஞ்சம் முன்னதாகத்தான் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் சங்கமான ஸ்பேஸ் இஞ்சினியர்ஸ் அசோசியேசன், இஸ்ரோ சேர்மன் டாக்டர் கே சிவன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி கோரிக்கை ஒரு வைத்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியத்தைக் குறைத்திருக்கும் மத்திய அரசின் ஆணைகளை ரத்து செய்து உதவுங்கள் என அவரிடம் வேண்டிக்கொண்டது. ஏனெனில் விஞ்ஞானிகளுக்கு இந்த ஊதியத்தைத் தவிர சம்பாதிக்க வேறு எந்த வழியுமில்லை என்று விளக்கிச்சொன்னது .

ஆனால், யாரும் எதுவும் பேசவில்லை. சென்ற ஆண்டு அரசு இஸ்ரோவை தனியார் மயமாக்குவதற்கு முயன்றபோதும் யாரும் எதுவும் பேசவில்லை.

கடந்த வருடம்,வரலாற்றில் முதன் முறையாக இஸ்ரோ இரண்டு தனியார் கம்பெனிகள் மற்றும் ஒரு பொதுத்துறை அமைப்புடன் இணைந்து 27 செயற்கைக்கோள்களை உருவாக்க ஒப்பந்தம் செய்தது.

கடந்த மூன்று பத்தாண்டுகளில் இஸ்ரோவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது. நேவிகெசன் சேட்டிலைட் தயாரிக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை தனியார் துறைக்குக் கொடுத்துவிட்டது.

தனியார் துறைக்கு இப்படியாக 27 செயற்கைக்கோள்கள் உருவாக்கும் பணியை ஒப்படைத்ததால் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிக்கும் அஹமதாபாத் கிளையின் ஸ்பேஸ் அப்ளிகேசன் செண்டரின் இயக்குநர் டாக்டர் தபன் மிஸ்ரா மிகவும் கோபமடைந்தார்.

சிவன் அவர்களுக்குப் பிறகு தபன் மிஸ்ரா இஸ்ரோவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு, ஏறக்குறைய முடிவான நிலையில் அவர் தனியார்மயமாவதை எதிர்த்த ஒரே காரணத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்டு இஸ்ரோவின் ஆலோசகராக மட்டும் நியமிக்கப்பட்டார்.

இஸ்ரோவின் சேர்மன் கே சிவன் அவர்கள்
"தபன் மிஸ்ரா எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். அவர் இஸ்ரோவின் முதன்மை அலுவலகத்தில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார்.இனி அவர் சேர்மன் க்கு ரிப்போர்ட் தர வேண்டும்"
என ஒரு ஆணையை பிறப்பிக்கிறார்

தபன் மிஸ்ரா போன்ற சிறந்த விஞ்ஞானியை இவ்வாறு நடத்துவது குறித்த போக்கு சக.விஞ்சானிகளிடையே கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியிருந்தது

தபன் மிஸ்ராவை இவ்விதம் பதவியிறக்கம் செய்தது தொடர்பாக நாட்டின் பல அறிவியல் துறை சார் விஞ்ஞானிகளும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு கடிதம் எழுதி இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இந்த செயற்கைக்கோள்களைத் தயாரிக்க தேர்வு செய்யப்பட்ட ஆல்ஃபா டிசைன் கம்பெனியானது பனாமா பேபர்ஸில் இணைந்ததாகும். இந்தக் கம்பெனியானது பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக்கித் தரும் கம்பெனியாகும்.

அடானி சமூகத்துடன் இந்தக் கம்பெனிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆல்ஃபா டிசைன் டெக்னாலாஜிஸ், டிபெண்ஸ் ஃபார்ம் எலக்ட்ரானிக்கின் முக்கியமான இந்திய கூட்டாளியுமாகும். அதன் பெயரானது இந்தியாவில் கமிசன் வழங்கியது தொடர்பான பனாமா பேப்பர்சில் முத்ன்மையாக வந்திருக்கிறது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஸ்ரோவுக்குள் இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசயங்கள் ஊடகங்களின் குரலாக வெளிப்படுத்தவும், அனைத்து விசயங்களையும் உங்கள் முன்னால் வைக்கும் துணிவும் ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆனால், அவை உங்களுக்கு ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகளை மட்டுமே படம்பிடித்துக்காட்டுகின்றன. நீங்கள் உங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைக்கவில்லையென்றால் அவை உங்களை முட்டாளாகவே வைத்திருக்கும்

https://www.nationalheraldindia.com/…/scientists-write-to-p…

https://thewire.in/…/as-isro-reached-for-the-moon-its-scien…

साभार - Girish Malviya

Trnaslated by Naanarkaadan Sara

கிரிஸ் மாள்வியா முக நூல் பதிவின் சில பகுதிகள்
 

 

;