election2021

img

10 லட்சம் வேலை தருவதாகச் சொன்ன மம்தா இப்போது 5 லட்சம் வேலை என்று சுருக்கிக் கொண்டது ஏன்? பிரச்சாரக் கூட்டங்களில் டாக்டர் சுஜன் சக்கரவர்த்தி கேள்வி....

கொல்கத்தா:
“மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் மம்தா ஆட்சியில் இருக்கிறார். 2011 இல் அவர் பிரச்சாரம் செய்த போது, நான் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று கூறினார். இப்போது ஏன் 10 லட்சத்திலிருந்து 5 லட்சமாக குறைத்துக் கொண்டார்” என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இடது முன்னணியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் ஜாதவ்பூர் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருமான டாக்டர் சுஜன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பி வருகிறார்.

அதுமட்டுமல்ல, நந்திகிராமில் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவத்தில் தனது கால் காயமடைந்துவிட்டது என்று கூறி, மம்தா பானர்ஜி வங்கத்து மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் சுஜன் சக்கரவர்த்தி தனது பிரச்சாரத்தில் சாடி வருகிறார்.வங்கத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புதான் மிகப்பெரிய பிரச்சனை என்றும் அதை திரிணாமுல் கட்சியாலும் தர முடியாது; பாஜகவாலும் தரமுடியாது எனக் கூறும் சுஜன் சக்கரவர்த்தி, “இந்த நாட்டில் பாஜகவின் ஆட்சியில் கிட்டத்தட்ட 15 கோடி மக்கள் வேலைவாய்ப்பு இழந்திருக்கிறார்கள்; மறுபுறம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில மகா கோடீஸ்வரர்கள் மேலும் மேலும் செல்வ வளங்களை குவித்திருக்கிறார்கள். இதற்கு காரணமான பாஜக எப்படி மேற்குவங்க இளைஞர்களுக்கு வேலை தர முடியும்? அவர்களிடம் அதற்கான எந்தத் திட்டமும் இல்லை” என்றும் அம்பலப்படுத்தி வருகிறார்.

;