election-2019

img

ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது

சென்னை, ஏப்.5-


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத்தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னை யிலுள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று (ஏப்.5) வெளியிடப்பட்டது. அறிக்கையை மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட, மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தி யாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:மத்தியிலுள்ள மதவெறி மோடி ஆட்சியை அகற்றுவது. மக்களவையில் இடதுசாரி கட்சிகளின் பலத்தை அதிகரிப்பது. மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைப்பது ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை முன் வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றால், இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கை களுக்காக குரல் கொடுப்பார்கள். மோடி அரசுமாநிலங்களுக்கான உரிமைகளை படிப்படி யாக பறித்து வருகிறது. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ ஆகியவற்றை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மதுரையில் வீடு வீடாகச் சென்று பெண்கள்வாக்கு சேகரிக்கக் கூட தேர்தல் அதிகாரி யிடம் அனுமதி வாங்க வேண்டும் எனக்கூறுகிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்சில மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள்,ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கள் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து பறக்கும் படை சோதனை மேற்கொள்கிறது. ஒரு ஆளும் கட்சியினரைக் கூட பறக்கும் படை சோதனை செய்யவில்லை. தேர்தல் ஆணை யம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக உள்ளது.ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி அறிக்கை வியாழக்கிழமை மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பொருளின் காலகட்டம் கி.மு. 791 என கண்டறி யப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பேதமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. எனவே கீழடி, ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், நீதித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும், தேசிய நதிநீர் கொள்கை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இந்த கோரிக்கைகளுக்காக மக்களவையிலும் குரல்கொடுப்போம், நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், க.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

;