districts

img

பிரதமர் மீது நடவடிக்கை கோரி மதுரையில் சிபிஎம் போராட்டம்

மதுரை,ஏப்.26-  ராஜஸ்தான் மாநிலத்தில் நடை பெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மையினரான இஸ்லாமியர் களுக்கு எதிராக மத வெறுப்பு பேச்சை பேசினார். இதற்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தன.  

மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் தேர்தல் ஆணை யத்திலும் காவல்நிலையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்தொடர்ச்சியாக மதுரையிலும் பிரதமர் மோடி மீது தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்ரல் 26 வெள்ளியன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்குவாசல் மார்க்கெட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மத்திய 2 ஆம் பகுதிக்குழுச் செயலாளர் பி.ஜீவா தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சசிகலா, மாவட்டக்குழு உறுப்பினர் கே.அலாவுதீன் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிச்செயலாளர்கள் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.

;