districts

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் திட்டங்கள்: விண்ணப்பம் வரவேற்பு

பெரம்பலூர், ஜூன் 10 -  பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத் தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் திடவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்  திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வும் கடன் கோரி விண்ணப்பிக்கலாம். கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற  பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமா னம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது  பூர்த்தி அடைந்தவராகவும் 60 வய துக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு  மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்ச மாக ரூ.15,00,000 வரை கடனுதவி வழங் கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6  சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை வசூ லிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக ரூ.2,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகி தம் 5 சதவீதம் ஆகும்.  சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி குழு மகளிர் உறுப்பினர் ஒரு வருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம்  வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்ச மாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படு கிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சத வீதம், மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி  6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ்  சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்சமாக ரூ.1  லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப் படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சத வீதம். ஒரு குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு ரூ.30,000 வீதம் 2 கற வைமாடுகள் வாங்க ரூ.60,000 வரை கட னுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி  விகிதம் 6 சதவீதம்.  எனவே மேற்படி கடன் விண்ணப்பங் களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகம், அனைத்து கூட்டுறவு வங்கி கிளை களில் பெற்று அதனை பூர்த்தி செய்து  உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட  கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

;