districts

img

தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை இந்திய மாணவர் சங்கம் முறையீடு

நாமக்கல், ஜூன் 16-  தனியார் பள்ளிகளில் வசூலிக்க கூடிய கட்டாய நன்கொடை, கட்டண கொள்ளைகளை தடுக்க வலியுறுத்தி  புதனன்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இந் திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்த னர்.  இதுகுறித்து இந்திய மாணவர்  சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு வின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாமக் கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்ட ணம் வசூலித்து வருகின்றன. கட்டாய  கல்வி உரிமை சட்டபடி நடைபெற்ற  மாணவர் சேர்க்கையில் ஏராளமான  முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், கட்டாய சேர்க்கை பெற்ற மாணவர்க ளின் பெற்றோரிடம் கட்டணம் கேட்டு  தனியார் பள்ளிகள் மிரட்டி வருகின்ற னர்.  இதேபோன்று அரசு  உதவி பெறும்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போதும் கல்வியாண்டு தொடக்கத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல  மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கடிதம் என்ற பெயரில் நன்கொடை வசூலித்து வரு கின்றனர். தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் இந்த கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண் டும். அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை  மேம்படுத்த வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது,   முன்னதாக, மாவட்ட முதன்மை  கல்வி அலுவலரிடம் மனு கொடுக்கை யில், மாணவர் சங்கத்தின் மாநில  தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட  செயலாளர் தே.சரவணன், மாவட்ட  தலைவர் எம்.தேன்மொழி, மாவட்ட  குழு உறுப்பினர் கோகுல் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

;