districts

img

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: தேனி மாவட்டத்தில் 13,568 பயனாளிகளுக்கு ரூ.18.70 கோடியில் உயர்தர சிகிச்சை

தேனி,மார்ச் 31- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழ் நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்”, “கலை ஞரின் வரும் முன் காப்போம்” இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும்-48, முதலமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல் படுத்தி, ஏழை, எளிய மக்க ளின் நலனை பாதுகாத்து வருகிறார்.       அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை உட்பட 7 அரசு மருத்துவமனை களிலும், 11 தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தின் கீழ் சிகிக்சை அளிக்கப் பட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில்       2021-ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 3,201 பயனாளிகளுக்கு ரூ.4.86 கோடி மதிப்பீட்டிலும், 2022-ஆம் ஆண்டில் 5,354 பய னாளிகளுக்கு ரூ.6.73 கோடி  மதிப்பீட்டிலும், 2023-ஆம் ஆண்டில் தற்போது வரை 1,436 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 9,991 பயனா ளிகளுக்கு ரூ.13.43 கோடி மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அதனைப்போன்று தனி யார் மருத்துவமனைகளில் 2021-ஆம் ஆண்டில் 1,241 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பீட்டிலும், 2022-ஆம் ஆண்டில் 1,923 பயனாளிகளுக்கு ரூ.2.49 கோடி மதிப்பீட்டிலும், 2023-ஆம் ஆண்டில் 413 பயனாளிகளுக்கு ரூ.0.48 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 3,577 பயனாளிக ளுக்கு ரூ.5.27 கோடி மதிப் ்பீட்டிலும் ஆக மொத்தம் 13,568 பயனாளிகளுக்கு ரூ.18.70 கோடி மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை அளிக் கப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் விரி வான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற      ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட திரு மலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ப வர் தெரிவிக்கையில், எனக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்ட போது, எனது இதயத்திலுள்ள குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த னர். அதனை சரிசெய்வ தற்கு போதிய பண வசதி யில்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வந் தேன். இந்நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, முதலமைச்ச ரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் ஆஞ்சியோ கிராம் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுவே தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டி ருந்தால் ரூ.80 ஆயிரத்திற்கு மேல் செலவு ஆகியிருக்கும்.  ஒரு தனியார் மருத்துவ மனையில் எந்த அளவிற்கு வசதிகளுடன் சிகிச்சை அளிப்பார்களோ அதைவிட சிறப்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மரு த்துவமனையில் முதல மைச்சரின் மருத்துவ காப்பீ ட்டுத்திட்டத்தின் கீழ் எனக்கு சிகிச்சை அளித்து வருகி றார்கள். இதன்மூலம் தற் ்போது நான் நல்ல முறை யில் சிகிச்சை பெற்று ஆரோக்கியத்துடன் உள் ளேன். எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு, மருத்துவம் சார்ந்த திட்டங்களில் குறிப் பாக முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட் டுத்திட்டத்தினை செயல் படுத்தி தமிழ்நாட்டு மக்க ளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகின்ற தமிழ் நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறினார். இத்தகவலை  தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெக வீரபாண்டியன் தெரிவித்துள் ளார்.

;