districts

img

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து மாதர் சங்கம் பிரச்சாரம்

திருவாரூர்/புதுக்கோட்டை, ஆக.5 - பெண்கள், சிறுமிகள் மீதான பாலி யல், குடும்ப வன்முறை என்னும் கொடு மைக்கு எதிராக அரசு, சமூகம், சட்டம், ஊடகம் உள்ளிட்ட துறைகள் மூலம்  பன்முக நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும், குடும்ப வன்முறை தடுப்புச்  சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மட்டுமே பாதுகாப்பு அதிகாரிகள் உள்ள னர். இதனை தாலுகா அளவிலும் இன்னும் விரிவாக கொண்டு செல்ல வேண்டும். பாலின சமத்துவத்திற்கான சட்டங் கள் குறித்த விழிப்புணர்வை காவல் துறை உள்ளிட்ட அனைத்து மட்டங்களி லும் உருவாக்கிட வேண்டும். பாடத் திட்டத்திலும் பாடநூல்களிலும் பெண் சமத்துவ கருத்துகளை உருவாக்கிட வேண்டும். குடும்ப வன்முறைக்கு ஒரு  முக்கிய காரணியாக மதுபோதை அமை வதால், டாஸ்மாக் கடைகளை படிப்படி யாக மூட வேண்டும். சட்டமன்ற சிறப்பு அமர்வை நடத்தி பெண்கள் மீதான வன்முறைக்கு முடிவு  கட்டுவது குறித்து விவாதிக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்து களை முன்வைத்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் வீடு வீடாக  துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சா ரம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருவாரூர் நகரக் குழு சார்பில் நடை பெற்ற இந்தப் பிரச்சார இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன் துவக்கி வைத்தார். இந்நிகழ் வில் நகரச் செயலாளர் எம்.தர்ம லிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் கே. தமிழ்ச்செல்வி, நகர குழு உறுப்பி னர்கள் என்.ராஜசேகர், வீ.சந்தோஷ், மாணவர் சங்க நகர செயலாளர் பி.சுர்ஜித்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் பாலின சமத்து வம், சொத்துரிமை, கடன் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சா ரத்தில் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சலோமி, பி.சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;