districts

img

தலித் வாலிபர் படுகொலை: குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வழங்குக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

திருவண்ணாமலை,ஜூலை 14- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் தேவன் (24). இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழ்ப்பாக்கம் கிராமத்துக்குச் சென்றுவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட தேவன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேவனின் உறவினர் வடிவேலுக்கு இதே கிராமத்தில் கார்த்தி குடும்பத்தி னர் ஏலச்சீட்டு பணம் தர வேண்டி யிருந்துள்ளது. அவர்கள் இழுத்தடிக்கவே, கார்த்திக் வீட்டிற்கு சென்ற தேவனும் வடி வேலும் சீட்டுப் பணம் கேட்டுள்ள னர். அப்போது இரு தரப்புக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவு மோட்டார் சைக்கிளில் தேவன் ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்துள்ளார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த கார்த்தி, கோகுல்ராஜ், சேகர் ஆகியோர் தேவனை வழிமடக்கி கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக, தேவனின் பெற்றோர், உற வினர்கள் கீழ் கொடுங்காலூர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும், தொடர் போராட்டம் நடத்தியதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எம். மாரி முத்து,  வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் எஸ். சுகுமார் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கொலையுண்ட தேவனின் குடும்பம்  ஓலைக்குடிசையில் தான் வாழ்ந்து வருகின்றனர். அரசு உடனடியாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.  வன்கொடுமை நடந்த பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக சென்று ஆய்வு நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2  ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும். வழக்கை காவல்துறை உரிய முறையில் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

;