districts

நெல்லையில் பொங்கல் பொருட்கள் விற்பனை தீவிரம்

திருநெல்வேலி, ஜன .12- பொங்கல் பண்டிகை 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படு கிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. பொங்கலையொட்டி பாளை, டவுன்  மார்க்கெட்டுகளில் வியாபாரம் விறு விறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பொங்கல் வைப்பதற்காக மண் அடுப்பு கள், மண் பானைகள் பல்வேறு இடங்க ளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள் ளது. வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலை, திருச்செந்தூர் சாலை, சட்டக் கல்லூரி பகுதியில் புதுவரவாக பஞ்சவர்ண பானைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த பானைகளை கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கிறார்கள். மண் பானைகளில் அழகுக்கேற்ப ரூ.500 வரையி லும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையி லும், 3 அடுப்புகட்டிகள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.  பொங்கலையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கிழங்கு வகைகள் உள்பட அனைத்து வகையான காய்கறிகளும், மூடை மூடைகளாக வாகனங்களில் டவுன் மார்க்கெட், பாளை மார்க்கெட்டுகளுக்கு வந்து குவிந்துள்ளன. அவற்றை சிறு வியாபாரிகள் வாங்கி கடைகளுக்கு வாங்கி சென்றனர். இதேபோல பொங்கல் படி கொடுப்பதற்காகவும், காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. வரத்து அதிகமாக  இருந்த போதிலும், கூட்டம் அலைமோதிய தால் காய்கறிகள் விலை நேற்றைவிட சற்று அதிகரித்து காணப்பட்டது. பொங்கலையொட்டி தேனி, விருது நகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் இருந்து நெல்லை சந்திப்பு, டவுன், பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் பகுதிகளுக்கு கரும்புகள் கட்டு கட்டுகளாக லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

10 எண்ணிக்கைகள் கொண்ட கரும்புகள் ரூ.400க்கு விற்கப்படுகிறது. ஒரு கரும்பின் விலை ரூ.40 க்கு விற்கப்படுகிறது.  பாளையங்கோட்டை, அம்பை, சேரன்மகாதேவி பகுதியில் இருந்து விற் பனைக்காக மஞ்சள் குலைகள் மார்க்கெட்டு களுக்கு வந்துள்ளது. ஒரு ஜோடி மஞ்சள் குலைகள் ரூ.40 வரை விற்கப்படு கிறது.இதேபோல் பாளை ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் டவுன் உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் பனை ஓலைகள் விற்பனையும் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதற்காக சீவலப்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளிலி ருந்து பனை ஓலைகள் கொண்டு வரப் பட்டது. ஒரு பனை ஓலை ரூ.40 வரை விற்கப் படுகிறது. இதேபோல் 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்குகள் ரூ.60-க்கும், 50 கிழங்குகள் கொண்ட கட்டுகள் ரூ.110-க்கும் விற்கப்படுகிறது. அம்பை, கல்லிடைக்கு றிச்சி, சேரன்மகா தேவி, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, பணகுடி உள்ளிட்ட பல்வேறு இடங்க ளிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. சீர்வரிசை பொருட்கள் புதுமன தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுப்ப தற்காக , நகைகள், ஜவுளிகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக  கடைக ளிலும் பொதுமக்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். இதனால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் திருவிழா போல் கூட்டம் இருந்தது.

;