districts

நெல்லையில் விட்டு விட்டு பெய்கிறது: மாஞ்சோலை மலைப்பகுதியில் பரவலாக மழை

திருநெல்வேலி, நவ. 29- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக  வட கிழக்கு பருவமழை வெகுவாக குறைந்து விட்ட நிலையில் 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை  இரவு முதல் பெரும்பாலான இடங்க ளில் மழை பெய்தது. திங்கட்கிழமை அன்று ஒரு சில இடங்களில் அவ்வப் போது லேசான சாரல் மழை பெய்த நிலை யில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து சீதோஷண நிலை மாறியது. காலை யில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகர பகுதியில் ஆரை குளம், முன்னீர்பள்ளம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதி யில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையில் 95.30 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 511 கனஅடிநீர் வந்து கொண்டி ருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1203 கனஅடி நீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 79.70 அடியாகவும், சேர்வலாறு நீர்மட்டம் 98.10 அடியாகவும் உள்ளது. மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிக பட்சமாக ஊத்து பகுதியில் 28 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அங்கு சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. மேலும் நாலுமுக்கு பகுதியில் 16 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 20 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

;