districts

நெல்லையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திருநெல்வேலி, டிச .25- ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டா டப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக நடை பெறும் இந்த பண்டிகை இந்த ஆண்டு சிறப்  பாக கொண்டாடப்பட்டது.  நெல்லை மாவட்டத்தில் தேவால யங்கள், கிறிஸ்தவ சபைகளில் சனிக் கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. மாவட்டங்களில் கிறிஸ்தவர் களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு, பலவண்ண, பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வித மாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் வரை அமைக்கப்பட்டிருந்தது.தேவால யங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். பாளையில் உள்ள மிக  பழமை வாய்ந்த தேவாலயமான தூய சவே ரியர் பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளி ரவு பாளை மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்து மஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தென்னிந்திய திருச்சபை சார்பில் பாளை முருகன்குறிச்சியில் உள்ள கதீட்ரல் ஆலயத்தில் ஞாயிறு அதிகாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தேவ  செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசாரம் நடைபெற்றது. முடிவில் அனை வருக்கும் கேக் வழங்கப்பட்டது. இதேபோல் பாளை சீவலப்பேரி சாலை யில் அமைந்துள்ள புனித அந்தோணி யார்  ஆலயத்தில் குழந்தை இயேசுவின் சொரூ பம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. சிறப்பு திருப்பலி மற்றும் ஆரா தனைக்கு பிறகு கிறிஸ்தவர்கள் அதனை பார்த்து சென்றனர். மேலப்பாளையம் தூய  அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள் புரத்தில் உள்ள தூய மீட்பர் ஆலயம், சாந்தி நகர் குழந்தை ஏசு ஆலயம், நெல்லை அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள  அந்தோணியார் ஆலயங்களில் கிறிஸ்து மஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற் றன.

;