districts

கல்வியை வணிகமாக பார்க்கும் பிரதமர் மோடி பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், பிப்.28 - தனியார் துறையினர் மருத்துவக் கல்லூரி துவங்க மாநில அரசுகள் நிலங் களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற  பிரதமர் மோடியின் கருத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்வி பயில சிறிய நாடு களுக்கு இந்திய மாணவர்கள் செல்வ தால் கோடிக்கணக்கான பணம் நாட்டை  விட்டு வெளியேறுகிறது என்றும் இதனைத் தடுக்க  தனியார்த் துறையி னர் மருத்துவக் கல்லூரிகளைத் தொ டங்க வேண்டும் என்றும் இதற்கு உதவிட மாநில அரசுகள் நிலங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து வெளியிட்டுள்ளார். இந்திய மாணவர்கள் வெளிநாடு களுக்குச் சென்று மருத்துவக் கல்வி படிப்பதற்கு அடிப்படைக் காரணமே ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நீட்  தேர்வு தான். நீட் தேர்வு வந்த பிறகு தான் இந்தியாவிலிருந்து மிக அதிக மாக மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பிற்குச் சேர ஆரம்பித்த னர் என்பதை மறைத்துவிட்டு பிரதமர் பேசியிருப்பது அபத்தமானது. மருத்துவ கல்வியைப் பெருமுத லாளி நிறுவனங்களுக்கு முற்றிலும் தாரைவார்க்கும் நோக்கத்தில்தான் பிரதமரின் கருத்து அமைந்துள்ளது. இது இந்திய மாணவர்கள் இடையே  பெரும் அச்சத்தை உருவாக்கியிருக் கிறது.

ஏற்கனவே நீட் தேர்வு குறுக்கீட் டால் மருத்துவ கனவு தகர்ந்து போன  மாணவர்கள், தற்போது வெளிநாடு களுக்குச் சென்று பயின்று வரும் சூழ லில், கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியாவில் மருத்துவக் கல்லூரி தொடங்கினால் அடித்தட்டு மக்கள் மருத்து வராகும் வாய்ப்பு இல்லாமலே போகும். ஒன்றிய அரசு தமது நேரடி கட்டுப்பாட் டில் புதிய மருத்துவக் கல்லூரி களைத் தொடங்குகிறோம் என்று சொன் னால்கூட ஒரு நியாயமிருக்கிறது. தனி யார்த் துறையினர் மருத்துவக் கல்லூரி  தொடங்குவதற்கு மாநில அரசுகள் நிலங்களை ஒதுக்க வேண்டுமென்று பிரதமர் கோரிக்கை விடுத்திருப்பது மிகப்பெரிய அபத்தம். இது நியாய மற்றது.  சிறிய நாடுகளுக்குச் சென்று கல்வி  கற்கும் மாணவர்கள் ஒன்றும் மிகப் பெரிய பொருளாதாரப் பின்புலம் உடைய வர்கள் அல்லர். பெரும்பாலும் வங்கிக்  கடன் பெற்றுதான் வெளிநாடுகளுக்கு சென்று, மிகுந்த சிரமங்களுக்கிடையில் மருத்துவம் பயின்று வருகிறார்கள் என்பதே உண்மை. தற்போது ஒன்றிய ரயில்வே துறை  அமைச்சர் பியூஸ் கோயல், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட 20-க்கும்  மேற்பட்ட முக்கிய பொறுப்பாளர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் பயின்றவர் கள் என்ற தகவல் இணையங்களின் வழி யாகத் தெரிய வருகிறது. ஏழை மக்களுக்கு ஒரு நீதி, பாஜக வினருக்கு ஒரு நீதி என்பது எந்த வகை யில் நியாயம்? கல்வியை வணிகமாக பார்க்கிற பிரதமரின் இந்த கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;