districts

பெண்களின் இலவச பேருந்து பயணத்தை இழிவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! ஏப்.24-ல் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.10- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட இளம் பெண்கள் மாநாடு ஞாயிறன்று திருவெறும்பூர் கணேசா  சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு சே.நிவேதா தலைமை வகித்தார். தீபிகா வரவேற்றார். மாநகர் மாவட்டச் செயலாளர் சேதுபதி,  வழக்கறிஞர் விஜயலட்சுமி, அறிவியல் இயக்கத் தலை வர் சாந்தி ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பா.லெனின் நிறை வுரையாற்றினார். மாநாட்டில், 12 பேர் கொண்ட உப குழுவும் ஒருங்கிணைப்பாளராக சே. நிவேதா  தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில், தமிழக அரசின் நகர பேருந்து களில் பெண்களின் இலவச பயணத்தை இழிவாக பேசும் நபர்கள் மற்றும் பேருந்து  ஓட்டுநர், நடத்துநர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலி யுறுத்தி ஏப்ரல் 24 அன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட் டம் நடத்துவது. அரசு பணிகளை தனியார் மையப்படுத்தா மல் பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டு டன் அரசு பணி வழங்க வேண்டும். குழந் தைகள் மற்றும் இளைஞர்கள் நலனை பாது காத்திட மாநகராட்சி வார்டு தோறும் விளை யாட்டு மைதானமும் உடற்பயிற்சி கூடமும்  அமைத்து தரவேண்டும் என்பன உள்பட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;