districts

மேகதாது அணை கட்டுமானப் பணிக்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

பாபநாசம், மார்ச் 5 - மேகதாது அணை கட்டுமானப் பணிக்கு கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.எச்.ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில பட்ஜெட்டில் காவிரி யின் குறுக்கே மேகதாது அணை கட்டுமான  பணிக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு  செய்து அறிவித்திருப்பது கடும் கண்டனத் துக்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது வில் தடுப்பணைக் கட்ட தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத்தில் மாநில அரசின் நடப்பு நிதி யாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. அதில் மேகதாதுவில் அணை கட்ட  1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.  ஒன்றிய அரசிடம் தேவையான அனைத்து  அனுமதியும் பெற்று மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பது, தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேகதாது அணை திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக் கையை கர்நாடகா, ஒன்றிய நீர்வள ஆணை யத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த போதே தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரி வித்தது.  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் பொருட் படுத்தாமல், தமிழக விவசாயிகளின் நலனை யும் கருத்தில் கொள்ளாமல், அரசியல் சுய லாபத்திற்காக கர்நாடக பாஜக அரசு இது போன்ற முன்னெடுப்புகளை செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக இந்த அணை கட்டப்போவதாக கர்நாடக  அரசு அறிவித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள  முடியாது. தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை ஒரு நாளும் விட்டுத் தரமுடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;