districts

img

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சிபிஎம் உறுப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

கும்பகோணம், ஜூன் 25 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநக ராட்சிக்கு உட்பட்ட 34-வது  வார்டில் தாராசுரம் எலுமிச்சங் காய் பாளையம் தெருவில் உள்ள பொதுமக்களிடம் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் ‘என் குப்பை என் பொறுப்பு’  என்ற திட்டத்தின் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை  விதிகள் 2016-ன் படி பொது மக்கள் தங்களது இல்லங்க ளில் தினசரி உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை களான உணவு கழிவுகள், மலக் கழிவுகள், காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவு கள், முட்டையோடு, தோட்ட கழிவுகள் மற்றும் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பாலிதீன் பைகள், கண்ணாடி, தர்மாகோல், பேப்பர் அட்டை, பழைய  இரும்பு பழைய துணி, மரச் சாமான்கள், ரப்பர் மற்றும் தோல் பொருட்கள் எலக்ட்ரா னிக், எலக்ட்ரிக்கல் கழிவுகள் என தனித்தனியாக தரம் பிரித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும் கும்பகோணம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசு ரங்களை வழங்கி 34 ஆவது  வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற  உறுப்பினர் ஆ.செல்வம் விழிப் புணர்வு ஏற்படுத்தினார். சிபிஎம் கிளை செயலாளர் மணி, திமுக கார்த்தி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

;