districts

img

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளைப் பூண்டு வாங்கிக் கொண்டு மோசடி பாதிக்கப்பட்ட வியாபாரி புகார்

தஞ்சாவூர், மார்ச் 20-  தஞ்சாவூரில் வியாபாரி ஒருவரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளைப் பூண்டு  வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட  கும்பலிடமிருந்து தனக்குரிய பணத்தை  பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட வியா பாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் அருகே நா.வல்லுண் டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த த.விஜய குமார் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்திடம் மனு ஒன்றினை அளித்தார்.  அந்த மனுவில், ‘‘தஞ்சாவூர் காமராஜர்  சந்தையில் வெள்ளைப் பூண்டு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். நான் வட இந்தியாவில் இருந்து வெள்ளைப்பூண்டை மொத்தமாக வாங்கி, தஞ்சாவூரில் சில் லரை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு  என்னைத் தொடர்பு கொண்ட கோவை உக்  கடத்தைச் சேர்ந்த அன்வர், இக்பால், தஞ்சா வூர் பொய்யுண்டார்கோட்டை கவுதமி ஆகி யோர் ஒரு லோடு வெள்ளைப் பூண்டுவை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி  கேட்டனர். நானும் ரூ.12 லட்சம் மதிப்பிலான பூண்டுவை வழங்கினேன். ஆனால் அவர்கள் பூண்டுக்குரிய பணம் கொடுக்க வில்லை. பின்னர், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்ததை அடுத்து கடந்  தாண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ரூ.2 லட்சம்  தந்தனர். ஆனால் அதன் பிறகு மீண்டும் பணம் வழங்கவில்லை. இவர்கள் என்னைப் போன்று தமிழகம்  முழுவதுமுள்ள பிற மொத்த வியாபாரி களிடமும், ஏலக்காய், மிளகு, ஆயில் என  பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை வாங்கி அதனை ஆன்லைன் மூலம் விற்  பனை செய்வதாக கூறி ஏமாற்றி வருகின்ற னர்.   இந்த மோசடியால் வடமாநிலத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் தமிழ கத்துக்கு மளிகைப் பொருட்களை அனுப்பு வதையே தவிர்த்து வருகின்றனர். எனவே  என்னிடம் வெள்ளைப் பூண்டு வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுத்து எனக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும்’’ என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட  காவல் கண்காணிப்பாளர், உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

;