சிதம்பரம், மார்.28- சிதம்பரம் மக்களவைத் தொகுதி யில் இந்தியா கூட்டணியில் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம் வர்த்தக சங்க தலைவர் சதீஷ்குமார், செயலாளர் அப்துல் ரியாஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்துடன் சென்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஜெயின் சங்கத்தினர், காய்கறி மார்க்கெட் உள்ள வணிகர்கள், சிதம்பரத்தில் உள்ள கூட்டணி கட்சியான திமுக,, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். கூட்டணி கட்சியினர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இதேபோல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர். லால்பேட்டை பகுதியில் இஸ்லாமிய சமூக மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடம் திருமாவளவன் ஆதரவு திரட்டினார்.