districts

கடல் சீற்றத்தால் மீன் பிடிக்க செல்லாத மரக்காணம் மீனவர்கள்

விழுப்புரம்,டிச.6- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வங்கக் கடல் பகுதியில் கடந்த சில நாட்க ளாக விட்டுவிட்டு மழை பெய்த வருகிறது. இந்த பகுதியில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வரு கின்றனர். இவர்கள் விசைப்படகு பைபர் படகு உள்ளிட்ட படகு களில் இந்த பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிப்பதை வழக்க மாக கொண்டுள்ளனர்.  தற்போது, கடல் சீற்ற மாக கொந்தளிப்புடன் காணப்படு வதால்  மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் தங்களது படகு களை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மழை யால் மீனவர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். மீனவர் பலி வசவன் குப்பம் மீனவர் ரங்க நாதன் (50) நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலைகளின் சீற்றம் அதிக மாக இருந்துள்ளது. இத னால் நிலை தடுமாறிய அவரது நாட்டு படகு கடலில் மூழ்கி யது. இதனைப்பார்த்த அருகில் இருந்த சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் பலனளிக்காமல்  போனதால் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் உடல் கரை ஒதுங்கி யது.

;