districts

குடிசைபகுதி மக்களிடம் சட்டவிரோதமாக கைரேகை, விழித்திரை தரவுகள் சேகரிப்பு சிபிஎம் கண்டனம்

சென்னை, டிச. 30 - குடிசைவாழ் மக்களின் கைரேகை, விழித்திரை பதிவு போன்ற தரவுகளை அரசு துணையுடன் சட்டவிரோதமாக தனியார் நிறுவனம் சேகரிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 58வது வட்டம் சைடாம்ஸ் சாலை யில் வசித்து வந்த மக்கள் 20 ஆண்டு களுக்கு முன் வெளியேற்றப் பட்டு அடிப்படை வசதிகள் அற்ற கண்ணப்பர் திடலில் உள்ள இடத்தில்  தங்க வைக்கப்பட்டனர். இவர்களின் விவரங்களை இம்பேக்ட் டெக்னால ஜிஸ் மூலம் செப்டம்பர் 2022ல் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பாது காப்பாக காவல்துறையும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இருந்துள்ளனர். ஒன்றிய அரசின் ெஜஎன்என்யு ஆர்எம் திட்டத்திற்காக 2011 இல்  இம்பேக்ட் டெக்னாலஜி நிறுவனத்து டன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் காலாவதிவிட்டது. அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்படாமல் தனியார்  நிறுவனம் அப்பணியை செய்ய அரசு, மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதிப்பது ஏற்புடையதல்ல. ஏழை மக்களின் தனிமனித சுதந்திரத்தை  பாதுகாக்க வேண்டும் என்ற கடமை யிலிருந்து தவறிய செயலாகும். இந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தம்மிடம் 25,000க்கு மேற்பட்ட ஏழை குடிமக்க ளின் தரவுகள் உள்ளது என “நியூஸ் மினிட்” ஆங்கில இணைய இதழ் நிருபரிடம் தெரிவித்துள்ளார். தரவுகளை சேகரிக்கும்  செயலில் ஈடுபட்டுவரும் இம்பாக்ட் டெக்னா லஜி நிறுவனத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தம் 2015 லே காலாவதி யாகிவிட்டது.

இருந்த போதிலும், தமிழ்நாடு அரசும், சென்னை மாநக ராட்சியும் இம்பாக்ட் நிறுவனத்துடன் சட்டவிரோதமாக இணைந்து இந்த செயலில் ஈடுபட்டுவருவது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் சட்டம் 1998 படி  எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாமல் ஏழை குடிமக்களின் தரவுகள் தனியார் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். தனிமனித உரிமைகளும் தரவுக ளும் பாதுகாப்பாக காப்பாற்ற வேண்டும் என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ள போதும், எந்தவித பாதுகாப்பு ஏற்பாடு களும் இன்றி, தனியார் நிறுவனத்துடன் முறையான ஒப்பந்தம் இன்றி மேற்கண்ட குற்ற செயலை அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி துணையுடன் மேற்கொள்வது எவ்விதத்திலும் ஏற்க இயலாது. இந்த சட்டவிரோத செயல்களுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் , இம்பாக்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;