districts

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை, மே 18- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.2000 அப ராதம் விதிக்கப்படும் என சென்னை மாநக ராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிர மடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சி ஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெ சிவிர் மருந்து கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ரெம்டெசிவிர் மருந்து கள் தனியார் மருத்துவமனைகளிலே செவ்  வாய்க்கிழமை முதல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வரு கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு பொதுமுடக்கம் அமல்ப டுத்தப்பட்டு, கட்டுப்பாடுகளும் கடுமை யாக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்  பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கொரோனா தொற்று பாதிப்பு உள்ள வர்கள் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்ட நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தி னர் விதிகளை மீறி வெளியே சென்றால் முதல் முறை ரூ.2000 அபராதரம் விதிக்கப்ப டும், இரண்டாவது முறையும் விதிகளை  மீறினால் அருகில் உள்ள கொரோனா மையத் திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்கிறார்களா என்பது தொடர்பான புகார்  களை அருகில் இருப்பவர்கள் 044-25384520  என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரி விக்காலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;