districts

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் சென்னையில் இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, செப்.4-  தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு  நிதி நிலைய அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்ததுது. இந்தத் திட்டத்தை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம், உயர்கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுத்துவ தற்கான அரசாணை வெளி யிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி யுதவி திட்டம் என்பதை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இந்தத் திட்டத்தில் உதவியை பெறுவதற்கு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் தற்போது சுமார் 93 மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 698 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘புதுமைப் பெண் திட்டம்’ என்றும் பெயர் சூட்டி உள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் ‘புதுமைப் பெண்’ திட்டம் திங்களன்று  (செப் 5) தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்திநராக கலந்துக் கொண்டு, 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப்பள்ளிகள் தொடங்கும் திட்டத்தை காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். மேலும், இந்த விழா வில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறை யன்பு உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.

;