districts

img

சிவகங்கை மாவட்டத்தில்   96 சதவீதம் பேர் தேர்ச்சி

 சிவகங்கை, ஜூன் 20-  சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 15660 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 15,125 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.58 ஆகும். .எஸ்எஸ்எல்சி தேர்வில் 17664 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 16537 மாணவ,மாணவிகள் 93.62 சதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8940 மாணவர்களில் 8110 மாணவர்கள் 90.72 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8727 மாணவிகளில் 8427 மாணவிகள் 96.60 சதம் பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை அருகே ராகினிப்பட்டி யிலுள்ள சம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 228 மாணவர்களில் 227 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 580 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் இரண்டு மாண வர்கள், 570 க்கு மேல்மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 8 பேர்,  கணிதத்தில் வேதியியலில் இரண்டு மாணவர்களும், உயிரி யலில் ஒரு மாணவரும் ,கணினி அறிவியலில் ஒரு மாண வரும், கணினி பயன்பாடு இரண்டு மாணவர்களும் ,கணக்கு பதவியில் ஒரு மாணவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ள னர்.  சாம்பவிகா பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்றது. இதில்  470 க்கு மேல் இரண்டு மாணவர்களும், 460 க்கு மேல் 8 மாண வர்களும், 450 க்கு மேல் 19 மாணவர்களும், 400க்கு மேல் 58 மாணவர்களும் மதிப்பெண் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேகர் பாராட்டி வாழ்த்தினார்.

;