districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி வகுப்பு

கும்பகோணம் ஏப்28-தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மண்டல பயிற்சிவகுப்பு கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் முதல் அமர்விற்கு தஞ்சை மாவட்டசெயலாளர் இளங்கோவன் தலைமையிலும், 2-வது அமர்வுக்குநாகை மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையிலும், மாநிலபொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாற்றுத்திறனாளிகளின் சட்டங்களும் திட்டங்களும் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புநடத்தினர். மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநில குழுஉறுப்பினர் வாசுதேவன், மாவட்ட துணை தலைவர் சுகுமாரன் மாவட்ட தலைவர் பகத் முஹம்மது அரியலூர் மாவட்டசெயலாளர் சுப்பிரமணியன் திருவாரூர் மாவட்ட செயலாளர் சந்திரா, திருவிடைமருதூர் ஒன்றிய பக்கிரிசாமி சுப்பிரமணி துணை தலைவர் சுபாஷ் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்ஜீவபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;