districts

img

மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரியில் பிரச்சாரம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின், வியாழனன்று (இன்று) தேர்தல்  பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றுகிறார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இந் தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநி லம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பய ணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள  தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கி ணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் வியாழனன்று (இன்று) மாலை பிரச்சார பொதுக்கூட் டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து திமுக அமைப்பு இணைச்செய லாளர் அன்பழகன், தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.

;