districts

img

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

மதுரை,மே 7- மதுரை,வேலூர்,திருவண்ணாமலை,திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாயன்று பலத்தக்காற்றுடன் மழை பெய்தது.இதனால் கோடையின் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.மதுரையில் மாலையில் பலத்தக்காற்றுடன் மழை பெய்தது. அக்னி நட்சத்திர வெயிலால் அவதிப்பட்டுவந்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்தது.வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன.பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையோரம் உள்ள மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்ததால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுகளின் மேல் கூரைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது. ஆரணி, இரும்பேடு, சேவூர், இராட்டினமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் திடீர் மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்த திம்பம் மலைப்பாதை மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.காஞ்சிபுரத்தில் சூறாவளி காற்றுடன் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம், ஓரிக்கை ,சின்ன காஞ்சிபுரம், செவிலிமேடு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானலில் மழையில் நனைந்த படி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

;