districts

பொம்மச்சந்திரா - ஒசூர் மெட்ரோ ரயில் சேவைக்கு  ஒன்றிய அரசு ஒப்புதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 8- கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு வும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரும் அருகருகே உள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக ஓசூர் - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். தினசரி லட்சக்கணக்கான மக்கள் இரு நகரங்களுக்கும் இடையே பயணிக்கின்ற னர். கர்நாடகாவில் பெங்களூருவிலிருந்து பொம்மச்சந்திரா வரை மெட்ரோ ரயில் உள்ளது. இதை தமிழகத்தின் தொழில் நகர ஒசூர் வரை நீட்டிக்க வேண்டும் என ஓசூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு அரசும் இதற்கு ஆதரவு அளித்தது. இதையடுத்து இதற்கான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரித்தது. அதன்படி தமிழ்நாட்டில் 8.8 கிலோ மீட்டரிலும், கர்நாடகாவில் 11.7 கிலோ மீட்டரிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரித்து அனுப்பிய அறிக்கைக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில்  இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன.

;