cinema

img

6 ஆஸ்கர் விருதுகளை வென்ற டியூன்  திரைப்படம்... 20 வயதில் ஆஸ்கர் வென்ற பில்லி எலிஷ்..!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் திரைப்படம் சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு, ஒளியமைப்பு, விஷுவல் எபக்ட்ஸ் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது.

கிங் ரிச்சர்ட் படத்திற்காக முதல் முறையாக நடிகர் வில் ஸ்மித் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய் திரைப்படத்தில் நடித்த ஜெசிகா கேஸ்டெய் பெற்றுள்ளார்.சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கோடா படத்தில் நடித்துள்ள டிராய் காஸ்டரும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வெஸ்ட் சைட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸிம் வென்றுள்ளனர். 

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை தி பவர் ஆப் தி டாக்  திரைப்படத்திற்காக ஜேன் கேம்பியன் வென்றுள்ளார். மேலும் சிறந்தப்படத்திற்கான விருதை ஷியான் ஹெட்டர் இயக்கிய கோடா திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை 'க்ரூல்லா' திரைப்படத்திற்காக ஜென்னி பீவன் வென்றுள்ளார். சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ திரைப்படம் வென்றது. சிறந்த ஆவணத்திரைப் படத்துக்கான விருதை சம்மர் ஆப் சோல் திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த திரைக்கதைக்கான விருதை பெல்பாஸ்ட் படத்திற்காக கென்னத் பிரானா பெற்றுள்ளார்.

அதேபோல் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை பென் பிரவுட்பூட் இயக்கிய தி குயின் ஆப் பாஸ்கட்பால் வென்றுள்ளது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை தி விண்ட்ஷீல்ட் வைப்பர் திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஜப்பான் நாட்டு திரைப்படம் டிரைவ் மை கார் வென்றுள்ளது. கிராமி விருது பெற்ற 20 வயதேயான பாடகி பில்லி எலிஷ். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு வெளியான திரைப்படமான நோ டைம் டூ டை திரைப்படத்தில் தனது சகோதரர் பினியஸ் ஒகன்னல் உடன் இணைந்து இசையமைத்திருந்தார். இந்நிலையில் சிறந்த இசை மற்றும் பாடலுக்கான ஆஸ்கர் விருதை இவர்கள் பெற்றுள்ளனர். 

;